பெண்கள் பூப்படையும் சம்பவம் – அறிந்ததும் அறியாததும்
பெண்மை மலர்வதன் முதல் அறிகுறி பூப்படையும் சம்பவம். பெண்ணின் உடலில் நிகழக்கூடிய மிக இயல்பான அந்தச் சம்பவம், அவளது உடல் மற்றும் மனத்தில் மிகப் பெரிய மாற்றங்களை உண்டாக்கக்கூடியது.
‘‘மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ் பகுதியானது Gonadotropin Releasing Hormone (GnRH) என்கிற ஹார்மோனை விடுவிக்கத் தொடங்கும் போது ஒரு பெண் பருவமடைகிறாள். இந்த ஜிஎன்ஆர்ஹெச் ஹார்மோனானது, எல்.ஹெச் (Luteinizing Hormone (LH) மற்றும் எஃப்.எஸ்.ஹெச் (Follicle Stimulating Hormone (FSH) என மேலும் இரண்டு ஹார்மோன்களை சுரக்கச் சொல்லி, பிட்யூட்டரி சுரப்பிக்கு சிக்னல் அனுப்பும். பருவமடைகிற இந்த நிகழ்வானது பெண்களுக்கு 10 முதல் 14 வயதில் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். பூப்படையும் பருவத்து அறிகுறிகள்…
* பருவமடையப் போவதன் அல்லது அடைந்து விட்டதன் முதல் அறிகுறியாக ஒரு பெண்ணுக்கு மார்பக வளர்ச்சி படிப்படியாக அதிகரிக்க ஆரம்பிக்கும்.
* அக்குள், அந்தரங்க உறுப்புகளில் ரோம வளர்ச்சி தென்படும்.
* சில பெண்களுக்கு முகம், நெற்றி மற்றும் முதுகில் பருக்கள் வரலாம்.
* மாதவிடாய் அதாவது, உதிரப் போக்கு வரத் தொடங்கும்.
* முதல் மாதவிலக்கு வந்ததை அடுத்து பெண்களின் உயரமும் கிடுகிடுவென அதிகரிப்பதைப் பார்க்கலாம். 2 முதல் 3 வருடங்களில் அவர்களது உயரத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
மேலே சொன்ன அறிகுறிகள் பருவ வயதில் இருக்கிற எல்லாப் பெண்களுக்கும் பொதுவானவை. அதே நேரம் முதல் மாதவிலக்கும் அதையடுத்த அவர்களது சுழற்சியும் எல்லோருக்கும் ஒன்று போல இருக்காது. இந்த வித்தியாசம் பெண்களின் பூப்பெய்தும் வயது, மாதவிடாயின் போதான ரத்தப் போக்கு, அது நீடிக்கும் நாட்கள் என எல்லாவற்றிலும் இருக்கலாம்.
10 முதல் 14 வயது என்பது பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது பொதுவான விதி. ஆனாலும், இது ஒவ்வொருவருக்கும் கூடவோ, குறையவோ செய்யலாம். உதாரணத்துக்கு சில பெண்கள் 7 அல்லது 8 வயதில் கூட பூப்பெய்தலாம்.
அந்த நிலையை Precocious Puberty என்கிறோம். இன்றைய உணவுப் பழக்கம், வாழ்க்கைமுறை, இளவயது மன அழுத்தம் எனப் பல விஷயங்களின் காரணமாக பெண் குழந்தைகளின் பூப்பெய்தும் வயதானது குறைந்து விட்டது உண்மைதான். ஆனாலும், 7 வயதுக்கு முன்பாகவே ஒரு பெண் குழந்தைக்கு பருவமடைதலின் அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
இன்னும் சில பெண்களுக்கோ பூப்பெய்தும் வயது வழக்கத்தைவிட தள்ளிப் போகலாம். பெரும்பாலும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதைப் பார்க்கலாம். 14 வயதுக்கு மேலும் பூப்படையாத பட்சத்தில் மருத்துவப் பரிசோதனையும் ஆலோசனையும் அவசியம். பூப்படையாததற்கு வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகள் காரணமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மிக மிக அரிதாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன என்பதால் பயப்படத் தேவையில்லை.