Quantcast
Channel: DESIBEES - All Forums
Viewing all articles
Browse latest Browse all 11760

சுய இன்பத்தினால் கிடைக்கும் நன்மைகள்

$
0
0
-----------------------------------------------------------------------------
தினமும் சுயஇன்பம் அல்லது தினமும் உடலுறுவு செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
---------------------------------------------------------------

l மகப்பேறு வேண்டி மருத்துவரை அணுகும்போது கணவருக்கு முதலில் பரிந்துரைக்கப்படும் விந்து பரிசோதனை (Semen Analysis) சுயஇன்பம் மூலமே பெறப்படுகிறது.

l சில செயற்கை முறை கருத்தரிப்புக்கு (IUI Intra Uterine Insemination) சுயஇன்பம் மூலமே விந்து..
பெறப்படுகிறது.

l ஒருவருக்கு ஆரம்பக் காலத்திலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டுவிட்டால், இப்பழக்கம் மூலமே விந்து சேகரிக்கப்பட்டு விந்து வங்கியில் (Sperm Bank) தேக்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவைப்படும்போது, பின்னர் அளிக்கப்படுகிறது.

l தவறான உடலுறவால் பால்வினை நோய்களுக்கு (STD) ஆளாவதைவிட, இந்தப் பழக்கம் பிரச்சினை இல்லாத வடிகால்.

l சுயஇன்பம் செய்வதால் எண்டார்பின் (Feel Good Harmones) நிறைய சுரப்பதால் மனத் தெளிவும் உடலுக்குப் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது என்கிறார்கள் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

என்றாலும் சுயஇன்பப் பழக்கம் பற்றிய சர்ச்சைகள் இன்றளவும் தொடர்ந்தே வருகின்றன. நோயாளியின் அச்ச உணர்வைப் பயன்படுத்தி வணிகம் செய்யும் விளம்பரங்கள், மருத்துவ (?) நிகழ்ச்சிகளும் நிறைய பணம் பார்த்துவருகின்றன. தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை. எனவே, சிந்தித்துச் செயல்பட வேண்டும்.


அங்காதி பாதம் என்ற எண்ணெய்க் குளியலை முதலில் மேற்கொள்ளச் சித்த மருத்துவம் அறிவுறுத்துகிறது. உடலுக்கு ஏற்றாற்போல் நல்லெண்ணெய் அல்லது குளிர் தாமரை தைலமும் பயன்படுத்தலாம். தலையில் தொடங்கி மேலிருந்து கீழாகப் பாதம்வரை எண்ணெயைத் தடவி ஊற வைத்து வெந்நீரில் குளிக்கவும். அப்போது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு கிடைக்கும்.

உணவே மருந்து:

இதற்கு மருந்தாகும் உணவு வகைகள்:

l உளுந்தங்களி, உளுந்தஞ்சோறு, உளுந்தோதணம், உளுந்துவடை எனப் பல உளுந்து உணவு வகைகள் இருந்தாலும் தென்னகத்தின் பாரம்பரிய உணவாகத் தோல்உளுந்து, புழுங்கல் அரிசி, சின்ன வெங்காயம் சேர்த்துச் செய்த உளுந்தங்கஞ்சி திகழ்கிறது.

l நம் பாட்டிகள் அறிவுறுத்திய முளைகட்டிய சிறுதானியப் பயறுக் கஞ்சி தென் தமிழகத்தின் மரபு உணவான மறைந்துவரும் பருத்திப் பால்

(செய்முறை: பருத்திக் கொட்டையை 12 மணி நேரம் நீரில் ஊறவைத்து மிக்சியில் அரைத்துப் பிழிந்தால், இள மஞ்சள் நிறப் பால் வரும். இதை லேசாகச் சூடாக்கி ஏலம், சுக்கு, கருப்பட்டி (அ) வெல்லம் சேர்த்துக் குடிப்பது மிகவும் சத்தான டானிக்.)

l ‘இன்பம் தரும் கீரைகள்’ என்று சித்தர் நூல்கள் விவரித்த, முருங்கை, தூதுவளை, வல்லாரை, பசலை. இவற்றைப் பாசிப்பயறு, நெய் சேர்த்துப் பொரியல் அல்லது கூட்டாகச் சாப்பிடலாம்.

l துவையல்: வாழைப்பூ துவையல், பிரண்டை துவையல் ஆகிய இரண்டுமே உடல் சூடு மற்றும் பித்தத்தைக் குறைக்கக்கூடியவை. புளிச்சகீரை துவையல், உடல் ஆற்றலைப் பெருக்கும். எள் துவையல், மன அமைதியைத் தரும்.

l சமீபத்தில் தொகுக்கப்பட்ட சித்த மருத்துவ நூல்களில் உருளைக்கிழங்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது மாமிசத்துக்கு ஒப்பான கலோரியை அள்ளித் தரும் சைவ உணவு. வேகவைத்த உருளையுடன் மிளகு, சீரகம், நெய் சேர்த்துச் சாப்பிடவும்.

l உட்சூட்டைக் குறைக்க வெண்பூசணிக் கூட்டு, வாழைத்தண்டு பச்சடி, வெள்ளரி, வெங்காயம் சேர்ந்த சாலட் சாப்பிடலாம்.

l வாரம் இரண்டு முறை நாட்டுக் கோழி, சிவப்பு இறைச்சி, மீன் ஏதேனும் ஒன்று.

l பாலிபீனால் நிறைந்த கலர் பழங்கள்: மாதுளை, சிவப்பு கொய்யா, கொட்டையுடன் கூடிய கறுப்புப் பன்னீர் திராட்சை மற்றும் வாழையடி வாழையான வாழைப்பழம்.

மருந்துகள்

l தேறாத உடலையும் தேற வைக்கும் தேற்றான் லேகியம், உடல் வன்மைக்கு அசுவகந்தி லேகியம், வெண்பூசணி லேகியம்.

l தொட்டாற்சிணுங்கி குடிநீர்: ஒரு கைப்பிடி அளவு இலையை 200 மி.லி. தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 50 மி.லி.யாக வற்ற வைத்து வடிகட்டி குடிக்கவும். இதனால் நரம்புத் தளர்ச்சி விரைவில் நீங்கும்.

l ரத்தின புருஷ் என்று அழைக்கப்படும் ஓரிதழ் தாமரை - நிலத்தை ஒட்டிப் பயிராகும் சிறு செடி. சுவைத்தால் வாயில் குழகுழப்பு தட்டும். பத்து இலையைச் சுத்தம் செய்து பச்சையாக மென்று சுவைப்பது உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். கிடைக்கும் காலத்தில் சேகரித்து, உலர வைத்துப் பொடி செய்துகொண்டு, ஒரு குவளை பாலில் ஒரு ஸ்பூன் கலந்து காலை, மாலை குடிக்கலாம்.

l இரவில் ஒரு டம்ளர் பாலில் அமுக்கரா பொடி ஒரு ஸ்பூன் கலந்து குடித்துவர, மன அமைதியுடன் கூடிய நல்ல தூக்கம் கிடைக்கும்.

l தகுந்த சித்த மருத்துவரை அணுகி அவருடைய பரிந்துரையின் பேரில் மட்டும் இவற்றில் தேவைப்படும் மருந்துகளை, குறிப்பிட்ட நாள்வரை எடுத்துக்கொள்ளவும்.

Viewing all articles
Browse latest Browse all 11760

Trending Articles