Quantcast
Channel: DESIBEES - All Forums
Viewing all articles
Browse latest Browse all 11760

ஒரு பெண் வேசியாக காரணம் என்ன?

$
0
0
ஒரு பெண் வேசியாக காரணம் என்ன?
ஒரு பெண் ஒரு பெண் தன் கணவனைத் தவிர வேறு ஓருத்தருடன் பாலியல் ரீதியில் தொடர்பு வைத்திருந்தால் அவளை வேசி என்று சமூகம் சொல்கின்றது. ஆனால் ஒரு ஆண் எத்தனை பேருடன் தொடர்பு வைத்திருந்தாலும் அவனைப்பற்றி எவரும் கணக்கெடுப்பதில்லை.
ஒரு பெண் பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ள பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாக செய்து வருகின்றனர். பண்டைய தமிழ்ச்சமூகத்தில் "தாசித் தொழில்" என்று அழைக்கப்பட்டு வந்தது பாலியல் தொழில் செய்யும் பெண்ணைத் தமிழில் விலைமகள், வேசி, பொதுமகள், கணிகை, அல்லது விபச்சாரி என அழைக்கப்படுகின்றனர்.
பெண்களைப் பொறுத்தவரையில். தான் விபச்சாரத்துக்கோ அல்லது பல ஆண்களுடனோ பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. பலர் இதனை ஒரு தொழிலாகச் செய்கின்றனர். இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. வறுமை வேலையில்லாப் பிரச்சினை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
இதனை தொழிலாகச் செய்கின்ற விலை மாதர்களை நாடி பல பணம் படைத்தவர்கள் வருகின்றனர். இதன்,முலம் விலை மாதர்கள் அதிகமான வருமானத்தை ஈட்டுவதோடு அதிக வருமானம் பெறும் ஒர தொழிலாகவும் இத் தொழில் இருக்கின்றது.இத் தொழிலைச் செய்பவர்கள் விலை மாதுகள் என்றால் இவர்களை நாடிச் செல்கின்ற ஆண்களை என்னவென்று சொல்வது?
ஒரு 20 வயதுடைய பெண் தன்னுடைய கணவனை யுத்தத்தின் போது பறிகொடுத்து விட்டார். அந்த பெண்ணுக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றது. கணவனை இழந்ததும் தனிமைப் படுத்தப்பட்டுவிட்டாள்.
இவளுக்கு தொழிலும் இல்லை. இன்னொருவனை திருமணம் செய்வதற்கும் சமுகம் இடம் கொடுக்கவில்லை. இவள் வாழ்ககையை எவ்வாறு கொண்டு நடாத்துவது. தன் பிள்ளையை நல்ல நிலைக்கு கொண்டு வருவது. அவள் இன்னொரு திருமணம் செய்ய எத்தணித்தபோது அவளது சமுகம் அதனை
ஏற்றுக் கொள்ளவில்லை.

அவள் வாழ வேண்டிய வயது அவள் திருமணம் செய்து இரண்டு வருடங்கள்தான் கணவனோடு வாழ்ந்திருப்பாள். தான் தனிமைப் படுத்தப் பட்டமை ஒருபுறம் பொருளாதார நிலை ஒருபுறமிருக்க. அவளுக்கு இப்போது வயது 20. காம உணர்ச்சிகள் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது. கணவனோடு இரண்டுவருடங்கள் மட்டுமே வாழ்ந்த இந்த இளம் பெண்ணுக்கு கணவணை இளந்த பின் காம உணர்ச்சி இல்லாமல் போய் விடுமா?
இந்தப் பெண்ணின் வாழ்க்கை கணவனை இழந்ததோடு முடிந்துவிட்டதா? ஏன் இந்த சமுகம் இவைகளைப்பற்றி சிந்திப்பதாக இல்லை. இவளை சமுகம் இன்னொரு திருமணம் செய்யவேண்டாம் என்று கட்டப்படுத்தியதன் எதிரொலி இன்று தனிமையில் இருக்கும் அவளது வீட்டுக்கு தினம் ஒரு ஆண் சென்று வருகின்றான்.
இவள் இவ்வாறு செல்லக் காரணம் அவளது சமுகமே.
இவள் மட்டுமல்ல யுத்தத்தின்போது கணவனை இளந்த பல இளம் பெண்களின் நிலை இதுதான். இவர்கள் விலை மாதுகள் அல்ல தன் இளம் வயதிலே கணவனை
இழந்துவிட்டார்கள். தன் காம உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் பல ஆண்களை நாடுகின்றனர். இது சமுக சீரளிவு என்று சொல்லமுடியுமா. கணவன் இறந்ததோடு அவளுக்கு ஆசாபாசங்கள் இருக்கக்கூடாதா?

கணவனை இழந்ததும் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லும் சமுகம். ஒரு ஆணின் மனைவி இறந்துவிட்டால் உடனடியாக அவனுக்கு மறுமணம் செய்து வைக்கின்றனரே இது எந்த வகையில் நியாயமானது. ஆண்களுக்கு மட்டும்தான் ஆசாபாசங்கள் இருக்கின்றதா?
இது ஒரு புறமிருக்க சமுக சீர்கேடு தொடர்பிலே நான் அதிகம் அவதானித்த விடயம் கணவன் வெளிநாட்டிலே இருக்கின்ற பெண்கள் வேறு ஆணுடன் அல்லது பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். எல்லா பெண்களும் அவ்வாற இல்லை ஒரு சிலர் இருக்கின்றனர்.
இவர்கள் இவ்வாறு தொடர்பு வைத்திருக்க காரணம் என்ன. பணத்துக்காக இவர்கள் மற்றவர்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.
தமது காம உணர்ச்சிகளை தீர்த்துக் கொள்வதற்காகவே வேறு ஆண்களை நாடுகின்றனர். இங்கே யார் தவறு செய்கின்றனர். தமது மனைவியின் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய அவளது கணவன் விடுகின்ற தவறுதான் காரணம்.
ஒரு பெண்ணின் கணவன் வெளிநாட்டில் இருக்கின்றார். அவள் இப்போது பலருடன் தொடர்பு. இரவு 9 மணிக்குப்பின் இராணுவத்தினரின் ஆட்சி அவளது வீட்டில் நடக்கும். அவள் அவ்வீட்டில் தனிமையில் இருப்பவள். இவள் வேசியானதற்கு யார் காரணம்? இதே நிலை பல பெண்களுக்கு இது ஒருபுறமிருக்க ஒரு இளம் பெண் அவளுக்கு பொருளாதார சிக்கல் இல்லை குடுப்பநிலை அப்படி. திருமணம் செய்ய வேண்டிய வயது ஆனால் திருமணம் செய்யவில்லை தினம் ஒருத்தனுடன் உல்லாசமாக இருக்கின்றாள். இது இவள் செய்யும் தவறுதான். தன் கணவன் தன்னை திரப்திப் படுத்தவில்லை என்பதற்காக வேறு ஆண்களை நாடுகின்ற பெண்களும் இருக்கின்றனர்.

Viewing all articles
Browse latest Browse all 11760

Trending Articles